சாக்ஷி தோனியை, மகேந்திர சிங் தோனி கலாய்க்கும் வைரல் வீடியோ…!உள்ளே

0
60

உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு தோனி எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இருப்பினும், அவர் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அவருடயை மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், மகேந்திர சிங் தோனி அவரது மனைவி சாக்ஷி தோனியைக் கலாய்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சாக்ஷி எடுக்கும் வீடியோவில் பேசும் தோனி, ‘இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை அதிகப்படுத்துவதற்காக என்னை வீடியோ எடுக்கிறாய்.. என்று கலாய்க்கிறார்.. அதனைக் கேட்டு அருகிலுள்ள சிரிக்கின்றனர். அதனையும் வீடியோ பதிவு செய்யும் சாக்ஷி, ‘ஸ்வீட்டி, நான் உன்னில் ஒரு பகுதி. உன்னுடைய ஃபாலோயர்ஸ் என்னையும் விரும்புகின்றனர்.

என்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை உன்னைப் பார்க்க விரும்புகின்றனர். எப்போது நீ எங்கே என்று கேட்கின்றனர் ’என்று பதிலளிக்கிறார். அதனைக் கண்டு கொள்ளாமல் நிற்கும் தோனி அருகில் சென்ற சாக்ஷி, ‘ஏன் என்னுடைய ஸ்வீட்டி என்னைப் பார்க்க மறுக்கிறார்,என்னைப் பார்க்கவாது செய்யலாம் என்று கொஞ்சலாகப் பேசுகிறார்’ அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.