நம்பி சாப்பிடலாம்..!ஸ்பெஷல் பானி பூரியை பிரபல கிரிக்கெட் வீரருக்கு செய்து கொடுத்த தோனி..!வைரல் வீடியோ

0
152

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன தோனி,உலக கோப்பைக்கு பின்னர் பெரிதாக எந்த போட்டியிலும் பங்கு பெறவில்லை.மேலும் அவர் அவ்வப்பொழுது தனது குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றுலா செல்லும் வீடியோக்களை அதிக அளவில் வைரலாகி வருகிறது.மேலும் தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கு பெறுவதால்,ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில்,கிரிக்கெட் வீரர்கள் ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா இருவருக்கும் தோனி பானிபூரி செய்து கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பானிபூரி கடையொன்றில் ஆர்.பி.சிங், சாவ்லா இருவரும் பானிபூரி சாப்பிடுகின்றனர். அதைப்பார்க்கும் தோனி கடைக்காரரின் அருகில் நின்றுகொண்டு இருவருக்கும் ஆளுக்கொரு பானிபூரியை செய்து கொடுக்கிறார்.