தாராள பிரபு -திரை விமர்சனம்

0
217

2011 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் இந்தி திரைப்படமான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘தாராள பிரபு’, மேலும் ஹிந்தி படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண், அன்னு கபூருக்குப் பதிலாக டாட்டர் கதாபாத்திரத்தில் விவேக் சித்தரிக்கிறார்.

Image result for dharala prabhu movie scenes

கால்பந்து விளையாட்டு வீரர் ஆன ஹரிஷ் கல்யாண் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்காக முயற்சித்து கொண்டிருக்கிறார். அப்போது மருத்துவரான விவேக் மூலம் ஸ்பெர்ம் டோனராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பை ஏற்கும் ஹரிஷிற்கு அதனால் நிகழும் விளைவுகளே படத்தின் கதை.

Image result for dharala prabhu movie scenes

ஹரிஷ் கல்யாண் எப்பொழுதும் ஒரு வித எனர்ஜியுடன் இருக்கும் கேரக்டர். அதனை டபுள் எனர்ஜியுடன் சிறப்பாக செய்திருப்பது விவேக் எனலாம். அந்த அளவுக்கு காமெடி, எமோஷன் என காட்சிக்கு காட்சி தனது டயலாக் டெலிவரியால் கைதட்டல் வாங்குகிறார். தான்யா ஹோப் தனது வேடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நன்றாக நிறைவு செய்திருக்கிறார்.

Image result for dharala prabhu movie scenes

ஸ்பெர்ம் டொனேஷன் என்ற தமிழுக்கு புதுமையான விஷயத்தை முடிந்தவரை சுவாரஸியமான திருப்பங்களுடன் படத்தின் இயக்குனர் நிறைவு செய்திருக்கிறார்.இரண்டாம் பாதியில் முக்கிய எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று உள்ளது.

Image result for dharala prabhu movie

செல்வகுமாரின் இனிமையான ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான மனநிலையை வழங்குகிறது, இது மற்றொரு சிறப்பம்சமாகும். பிந்தைய பாதியில் சில மெதுவான காட்சிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஓட்டத்தைத் தொந்தரவு செய்கின்றன. ஒரு சிறந்த பின்னணி மதிப்பெண் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அதிக முயற்சி ஆகியவை திரைப்படத்தை சரியான ரீமேக்காக மாற்றியிருக்கும்.

மொத்தத்தில் தாராள பிரபு படம் குழந்தையின்மைக்கு பின் நடக்கும் வியாபாரத்தை காட்டுகிறது.