தனுஷ் எதிர்ப்பு தெரிவித்தும்…நேரடியாக OTT தளத்தில் ரிலீசாகும் தனுஷின் ஜகமே தந்திரம்

0
50

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜகமே தந்திரம் படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தார்கள். ஆனால் அதே நிறுவனம் தயாரித்துள்ள ஏலே படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதனால் ஜகமே தந்திரம் படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிரச்சனை ஏற்பட்டது. மேலும் ஓடிடி நிறுவனம் ஜகமே தந்திரத்திற்கு பெரிய தொகை கொடுப்பதால் தியேட்டர் ரிலீஸை தவிர்க்க முடிவு செய்துவிட்டார்களாம்.

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படுமாம். தனுஷ் எதிர்ப்பு தெரிவித்தும் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகப் போவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.