லாக்டவுனால் பல மாதங்கள் கழித்து உண்மை காதலுடன் மீண்டும் இணைந்த தனுஷ்..!

0
61

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் நடிகர்கள், நடிகைகள் மாதக் கணக்கில் வீட்டில் சும்மாவே இருந்தார்கள். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. இதையடுத்து ஒவ்வொருவராக படப்பிடிப்பை துவங்கி வருகிறார்கள்.சுமார் 7 மாதங்களாக வீட்டில் இருந்த தனுஷ் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தான் கேமராவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உண்மை காதலை மிகவும் மிஸ் செய்தேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அத்ரங்கி ரே படத்தை 2021ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிட முதலில் முடிவு செய்தார்கள். தற்போது அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.

தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவை இயக்கியவர் ஆனந்த் எல். ராய். அத்ரங்கி ரே தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.