பல விமர்சனங்கள் வந்தாலும்..!தர்பார் வசூல் இதுவரை மட்டும் 200 கோடியாமே

0
140

தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் 25 வருடங்களுக்குப் பிறகு காக்கி சட்டை அணிந்து நடித்தது தான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அப்பா-மகள் செண்டிமெண்ட்காக இந்த படத்தை பார்க்க சென்று வருகின்றனர். மேலும் இதில் நிவேதா தமாசுக்குகொடுத்த முக்கியத்துவமான கதாபாத்திரங்கள் கூட நயன்தாராவுக்கு கொடுக்கவில்லை என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இப்படி படத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் உலக அளவில் 11 நாட்களில் 200 கோடி வசூல் செய்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் என்பது 80 கோடியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 20 கோடியும், கேரளாவில் 8 கோடியும் ,கர்நாடகாவில் 19 கோடியும், இந்தியில் 8 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.