டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது…

0
14

2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், டெல்லி வெற்றியையும், ஹைதராபாத் தோல்வியையும் மட்டுமே கண்டுள்ளன. எனவே டெல்லி அணி ஹாட்ரிக் வெற்றிக்காக இலக்கு நிர்ணயிக்க, ஹைதராபாத் முதல் வெற்றிக்கான முனைப்பில் உள்ளது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதையொட்டி டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி வீரர்கள் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இன்று நடக்கும் இந்த போட்டியில் ஒரு அணி ஹர்டிக் வெற்றியை பதிவு செய்யவும் மற்றொரு அணி ஹர்டிக் தோல்வி பெறாமல் வெற்றி கணக்கை தொடங்கவும் வெறித்தனமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .