(டெல்லி vs ராஜஸ்தான்) இன்றைய போட்டியில் வெல்லப்போவது எந்த அணி?…

0
22

2020 ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வரும் டெல்லி அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்கள், திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள டெல்லி அணிக்கு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தசைப்பிடிப்பால் அவதிப்படுவது திடீர் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரிஷாப் பண்ட் காட்டாயம் ஒரு வாரம் ஓய்வு எடுக்க அணி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் அணியில் மாற்று விக்கெட் கீப்பர் வெளிநாட்டவராக இருப்பதால் வேறு வழியின்றி அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் ஹெட்மயரை நீக்க வேண்டியுள்ளது.

மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இத்தகைய மாற்றத்துடன் இறங்கிய டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. ஆனாலும் நட்சத்திர வீரர்களின் பட்டாளம் குறையாமல் இருப்பதால் டெல்லி அணி வலுவாகவே காணப்படுகிறது .

7 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புது புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அத்துடன் ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய போது முன்னணி வீரர்கள் கைவிட்டு தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தானை பிரபலம் இல்லாத வீரர்களான ராகுல் திவேதியாவும் (45 ரன்), ரியான் பராக்கும் (42 ரன்) ஜோடியாக காப்பாற்றினர்.

இந்த வெற்றி ராஜஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவன் சுமித் பார்முக்கு திரும்பினால் ராஜஸ்தான் மேலும் வலுப்பெறும். ஏற்கனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பதில் கொடுக்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது.

இதையடுத்து இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .