முதலமைச்சரின் பெண்னை கடத்த மிரட்டல்..! போலீசார் உசார்!!

0
187

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மின்னஞ்சலுக்கு நேற்று இரவு மர்ம இமெயில் ஒன்று வந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த இமெயிலில் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதாவை கடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
ஹர்சிதாவை கடத்தக்கூடாது என்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சில வாசகங்கள் அந்த இமெயிலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இமெயில் மிரட்டல் குறித்து உடனடியாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற போலீசார் இமெயில் விவரங்களை பெற்று அந்த இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்கிற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

கெஜ்ரிவாலுக்கு ஒரு மகள், ஒரு மகன் உண்டு. இவர்களில் மகள் ஹர்சிதா டெல்லி ஐ.ஐ.டியில் படித்து வருகிறார். தற்போது அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லி ஐ.ஐ.டி வளாகமும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளது.