ரஜினியின் வெறித்தனம்! தர்பார் 2nd லுக் வேற லெவல்!

0
101

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இந்த ஆண்டு வெளியான பேட்டை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்

இந்நிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு தர்பார் படத்தின் SecondLook போஸ்டர்யை தனது ட்விட்டர் பக்கத்தில் லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. படையப்பா படத்திற்கு பிறகு தன்னுடைய உடலை வெளிப்படுத்தி ரஜினிகாந்த நடித்திருக்கிறார் என்பது இப்படத்தின்  SecondLook போஸ்டர்யை பார்க்கும் போது தெரிகிறது. ‘வயசானாலும் உன்னோட ஸ்டைலும், கெத்தும் இன்னும் மாறல-னு’  படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் தான் பலருக்கும் நியாபகம் வரும். தர்பார் படத்தின் SencondLookPoster தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.