வெளிவந்தது அசுரன் படத்தின் புதிய அப்டேட்!!! இது வேற லெவல்…

0
169

தனுஷ் தற்போது அசுரன் படத்தில் தீவிரமாக நடித்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கம் இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டைவேடத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பானது முழுவதும் கோவில்பட்டி நகரினை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷின் சிறுவயது கதாபாத்திரத்தில் கருணாஸ் மகனான கென் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆடுகளம் படத்திற்கு பின் இந்த படத்திற்கு தான் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அவர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று பதிவாக்கப்பட்டுள்ளது. யுகபாரதி எழுதிய அந்த பாடலினை தனுஷ், கருணாஸ் மகன் கென் மற்றும் டீஜே ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இதனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.