அடுத்தடுத்து இன்னும் 3 படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது!!!

0
199

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் திரையுலகை போல தற்போது இரண்டாம் பாகங்களை எடுப்பது வழக்கமாகிவிட்டது. ஹிட்டான அணைத்து படங்களுக்கும் இரண்டாம் பாகங்களை தற்போது தமிழில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியையே தழுவியுள்ளன. இருந்தாலும் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அது மக்களுக்கு முதல் பாகத்தை போல இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுவதால் படத்தின் வசூல் அதிகமாகும் என கருதியே தற்போது அதிகமாக இரண்டாம் பாகங்களை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பபோவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சிவி குமார் சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி மற்றும் தெகிடி போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.