டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

0
19

உலகமெங்கும் அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சென்னை 2 வெற்றிகளையும், ஹைதராபாத் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

சென்னைஅணியை பொருத்தவரை, பேட்டிங் தான் பிரதான பிரச்னையாக இருக்கிறதென கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஸ்கோரை சேசிங் செய்வதற்கு புகழ்பெற்ற சென்னை, நடப்பு சீசனில் இதுவரை சந்தித்த 5 தோல்விகளுமே சேசிங்கின்போது தான் என்பது அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஹைதராபாதை பொருத்த வரை, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் பேட்டிங் வரிசையில் எந்தவொரு பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்