டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

0
16

2020 ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் அனுபவமிக்க வீரர்களை வைத்திருக்கும் சென்னை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

சார்ஜா மைதானத்தில் தற்போது இந்தப் போட்டி நடை பெற்று வருகிறது . அமீரகத்தில் உள்ள மிகச்சிறிய மைதானம் சார்ஜா என்பதால் பவுண்டரி, சிக்சர் என வாணவேடிக்கையை இன்றைய போட்டியில் அதிகமாக எதிர்பார்க்கலாம். நடப்பு தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் சென்னை அணி உள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என பந்துவீச்சை குறிப்பிடலாம்.

முதல் போட்டியில் தோனிக்கு பேட்டிங் செய்ய சரியான வாய்ப்பு கிடைக்காததால் அவரது ஃபார்ம் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் மேலும் அம்பதி ராயுடு இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை – ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 போட்டியிலும் ராஜஸ்தான் அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை இந்த இரு அணிகளும் மோதிய போட்டியின் போது தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது .

இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதையொட்டி சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜஸ்தான் அணி ஆட தயாராக உள்ளது