பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்

0
56

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் தமிழக வீரர் நடராஜன். 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2018 ஜூன் மாதம் நீண்ட நாள் தோழி பவித்ராவைத் திருமணம் செய்தார் நடராஜன். இந்நிலையில் நடராஜன் – பவித்ரா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹைதராபாத் அணி கேப்டன் வார்னரும், நடராஜனுக்குக் குழந்தை பிறந்துள்ளதை நேற்றைய ஆட்டத்தின்போது தெரிவித்தார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் நடராஜனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.