கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும்..?விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
39
Medical workers wearing protective suits measures the body temperature of a man and another draws blood for the preliminary blood test of tested for COVID-19 at the Chulalongkorn University Health Service Center in Bangkok, Thailand, April 2, 2020. REUTERS/Athit Perawongmetha

உலகில் பல வல்லரசு நடுக்களை கூட இன்றளவும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தன்மையை பற்றி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து தங்கள் முடிவுகளை ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை தற்பொழுது பார்க்கலாம்.

மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிற வரையில், கொரோனாவின் பல அலைகள் பொதுமக்களை வந்து தாக்கும்.

இன்புளூவன்சா மற்றும் பொதுவான கொரோனா வைரஸ்கள் மிதமான வெப்ப பகுதிகளில் குளிர்காலத்தில் உச்சம் பெறுகின்றன. ஆனால் வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவுகின்றன.

காற்றிலும், காற்றின் பரப்புகளிலும் வைரஸ் உயிர்வாழும்.

காய்ச்சல் போன்ற பிற சுவாச நோய்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான தொற்றுகளின் மூலமாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாகவோ அடைந்து விட்டால், கொரோனா வைரஸ் பரவல் விகிதம் கணிசமாக குறைய வேண்டும். இதனால் பருவ கால காரணிகளுக்கு வைரஸ் அதிகமாக பாதிக்கப்படும்.

இன்புளூவன்சா போன்ற அதே சுழற்சி முறையைப் பின்பற்றுகிற என்.எல்.63 மற்றும் எச்கேயு 1 போன்ற மிக சமீபத்தில் வெளிவந்தவை உள்ளிட்ட பிற கொரோனா வைரஸ்களுக்கும் இது போன்ற பருவ நிலை பதிவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தனிநபர் பாதிப்புவிகிதம், வளைகுடா நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது.

மேற்குறியவாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் பருவ கால நோயாக ஆண்டு முழுவதும் வலம் வரும் என்கிற நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு சக்தியை (மந்தை எதிர்ப்பு சக்தியை) பெறுகிற வரையில், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுவதுதான், வைரஸ் தாக்குவதில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.