கொரோனா நோயாளிகளைத் விடாமல் துரத்தும் மற்றுமொரு அதிபயங்கரம்… வெளியான அதிர்ச்சி தகவல்

0
73

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை திணறடித்து வருகிறது. வைரஸ் தொற்று பரவி 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், இன்னும் பல நாடுகள் வைரசின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்தியாவும் இந்த நிலைக்கு தப்பவில்லை.

இந்நிலையில்,கொரோனா நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் மனநிலை முன்பு இருந்ததைவிட தற்போது பல மடங்கு அசாதாரணமாகக் காணப்படுவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகைய முடிவுகள் எட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் முன்பு இருந்ததைவிட பல மடங்கு அழுத்தமான மனநிலைக் கொண்டவர்களாக மாறியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு அதிபயங்கரமாக கனவுகள் வருவதாகவும் அதன் அளவு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகமானது என்றும் கூறப்படுகிறது. சொந்தங்களால் கை விடப்படுதல், வேலை இழப்பு, பண இழப்பு மற்றும் வைரஸின் அதிக பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் வருவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பெண்களைப் பொறுத்த வரையில் இந்த அளவு மேலும் அதிகமாக இருப்பதாகவும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.