குழந்தைகளை தூக்கி கொஞ்ச முடியவில்லை…கொரோனா பாதித்த பிரபல நடிகை உருக்கம்

0
44

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்துள்ளனர்.

Malaika Arora confirms she has tested positive for COVID-19 | Celebrities  News – India TV

கடந்த வாரம் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் அவரவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில்,கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் தனது மகன் அர்கான் மற்றும் தனது செல்லப் பிராணியைக் கட்டிப் பிடிக்க முடியவில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மலைக்கா அரோரா வேதனை தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “சமூக விலகல், தனிமைப்படுத்துதல் காரணமாக இன்னும் சில நாட்கள் என் குழந்தைகளை கட்டிப்பிடிக்க முடியாது. இருந்தாலும் அவர்களது முகங்களைப் பார்க்கும் போது எனக்கு சக்தியையும், உற்சாகத்தையும் தருகிறது” என்று கூறியுள்ளார்.