குக் வித் கோமாளி பிரபலம் ‘ஷிவாங்கி’ படைத்த புதிய சாதனை…குவியும் வாழ்த்துக்கள்

0
19

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூக வலைதளத்தில் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனி ரசிகர் ஆர்மி உள்ளது .நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

Shivangi (Sivaangi) Cook with Comali Biography, Wiki, Age, Songs, Photos

மேலும் இந்த சீசனில் புகழ்,சிவாங்கி,மணிமேகலை,பாலா ,சுனிதா கோமாளியாக அவர்கள் செய்யும் காமெடிகள் நிகழ்ச்சியை வேற லெவலில் வைத்துள்ளது.மேலும் புகழ்-சிவாங்கி அண்ணன் -தங்கை பாசம்,அஸ்வின் -ஷிவாங்கியின் ரொமான்ஸ் பார்க்க ஒரு தனி கூட்டமே உள்ளது.னது தனித்திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த ஷிவாங்கி அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Cooku With Comali 2 14th February Episode Valentines Day Special: Pugal and  Shivangi Propose to Pavi and Ashwin? - TheNewsCrunch

கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் 1 மில்லியன் பேர் ஷிவாங்கியை பின் தொடர ஆரம்பித்திருப்பது தெரிய வந்துள்ளது.இதேபோல் குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் அஸ்வினின் இன்ஸ்டாகிராம் கணக்கை 1.3 மில்லியனுக்கும் அதிகமானோரும், புகழை 1.2 மில்லியன் பேரும் பின் தொடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.