முதல் முறையாக வாக்களித்த தலையொட்டிய இரட்டையர்கள்!!!

0
52

மக்களவை தேர்தல் இந்தியாவில் பரபரப்பாக நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களைக் கொண்ட மக்களவை தேர்தல் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இதன் முடிவுகள் வரும் 23 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பாட்னாவில் மக்களவை தேர்தலில் முதல் முறையாக தலையொட்டிய இரட்டையர்கள் வாக்களித்தனர்.

இதுவரை யாரும் இந்த வகையில் வாக்களிக்காத நிலையில் நேற்றைய தினம் அவர்கள் இருவரும் தனித்தனியே வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களித்தது அனைவரையும் வியக்கவைத்தது. சபா மற்றும் பேஃரா இவர்கள் இருவரும் பிறக்கும் போதே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here