தளபதி 64 -”நம்மவர்” தழுவல் கதையா?வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்…!

0
109
Kamal-Hassan-Vijay

பிகில் பட வெற்றியை தொடர்ந்து ”தளபதி 64” படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் .கைதி பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் .மேலும் தளபதி 64 படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்தது.இந்த புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் படத்தின் கதை இதுவாக தான் இருக்கும் என கெஸ் செய்து ஷேர் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ,விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்து நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் வெளியானது. பாக்யராஜ் மகன் சாந்தனு கல்லூரி மாணவனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வரும் செய்தி என்னவென்றால்,இந்த படம் கமல்ஹாசனின் நம்மவர் கதை என்றும் லோகேஷ் கனகராஜ் கதை உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார் என்று இன்னொரு தகவலும் பரவி உள்ளது. நம்மவர் படத்தில் கமல்ஹாசனுக்கு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரம். அவருக்கும் ரவுடி மாணவனுக்கும் நடக்கும் மோதலை திரைக்கதையாக்கி இருந்தனர்.

கல்லூரியில் அனைவருடனும் மென்மையாக பழகும் கமல்ஹாசன் பிளாஷ்பேக்கில் முரட்டுத்தனமான கோபக்காரர். நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இதனை மறுத்தனர். விஜய் நடிப்பது வேறு புதிய கதை என்றனர்.