கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்..?உறுதியளித்த நாடு

0
71

உலகில் பல வல்லரசு நடுக்களை கூட இன்றளவும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் வீரியம் குறைத்த பாடில்லை.மேலும் பல நாடுகளும் தடுப்பூசி கவனிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது,டுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை அடைந்து விட்டதாகவும், அதில் மூன்று தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.