தடுப்பூசி விவகாரத்தில் மக்களிடம் ‘ரகசிய’ ஒப்பந்தம்?புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்

0
33

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான ஒரு பயனுள்ள தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன. பல நாடுகளில் தானாக முன்வந்து மக்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில் குறிப்பிட்ட பொதுமக்களை தேர்வு செய்து அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சீனா தனது நிரூபிக்கப்படாத தடுப்பூசியை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், தடுப்பூசி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் பயணிக்கும் மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.

அவசரகால பயன்பாட்டை மேற்கோளிட்டு, தடுப்பூசிகள் இறுதியில் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கும் என்று கூறி, இன்னும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இது குறித்த தகவல்களை சீனா மறுத்துள்ளது.பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் கட்டாயப்படுத்தி ரகசியமாக அதுவும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.