திரும்பி வந்துட்டேனு சொல்லு : சென்னை அணியின் வெற்றியால் ரசிகர்கள் ஆரவாரம்

0
24

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின.இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது மேலும் சாம் குரனை சென்னை அணி ஓப்பனிங் இறங்க வைத்து அதிரடி காட்டியது சற்று வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது . சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேரிஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் டேவிட் வார்னர் 9(13) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 4(3) ரன்னும், பேரிஸ்டோ 23(24) ரன்களும், ப்ரியம் கார்க் 16(18) ரன்களும், விஜய் சங்கர் 12(7) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தை பதிவு செய்தநிலையில், 57(39) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் 14(8) ரன்களும், நதீம் 5(5) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சந்தீப் சர்மா 1(2) ரன்னும், நடராஜன் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக கர்ண் சர்மா மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர், சாம் கரண் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. சாம் குரனை ஓப்பனிங் செய்யவைத்தது மேலும் அணியில் அணைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது .