செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு..!

0
35

சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

செம்பரம்பாக்கத்தில் 22 அடியை எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.அடையாறு வழியே செம்பரம்பாக்கம் நீர்ப்பாதை உள்ளதால், தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களை நோக்கி அனுப்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடைசியாக 2015-ஆம் ஆண்டில் 33 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது திறக்கப்படுகிறது.