வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனிகபூர்…!

0
1764

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டு நவம்பர் 14-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தில் எமோஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகவும், 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படமும் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.