ப்ளூ சட்டை மாறன் இதற்காக மட்டூம் மாதம் 75000 செலவு செய்கிறாராம்!

0
133

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.

இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

இந்த நிலையில் பிரசாந்த் ப்ளூ சட்டை மாறனின் மறுபக்கத்தைப் பற்றியும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே ஒரு பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இவர் சொந்த காசில் மாதம், மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை மரம் நடுவதற்கான மரங்களின் விதைகளை கிராமங்களுக்கு கொடுத்து அனுப்புவார். இதுவரை ப்ளூ சட்டை மாறன் ஒரு லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளின் விதைகளை அளித்துள்ளார்.