பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகள்! தமிழகம் எதிர்பார்த்த ஒன்று கூட இல்லை!

0
153

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் நிலையில் இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி )தேர்தல் அறிக்கையை  வெளியிட்டது பாஜக.

48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக தேர்தல் அறிக்கை:

 • விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான, 5 ஆண்டுகள் செலுத்தக் கூடிய வகையில் வட்டியில்லா விவசாய கடன் வழங்கப்படும்.
 • பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
 • சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.
 • நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.
 • தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி செய்யப்படும்.
 • வாஜ்பாய் கனவை நனவாக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • மாநில காவல் துறையை நவீன மயமாக்க நிதியுதவி வழங்கப்படும்.
 • 2 ஹெக்டேர் வைத்துள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
 • தேசிய தேன் மற்றும் தேனீக்கள் மையம் உருவாக்கப்படும், இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் .
 • அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்.
 • யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 • நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்.
 • அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
 • கட்டுமானத்துறையில் 2024-ம் ஆண்டிற்குள் முதலீட்டு மூலதனமாக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 2024-க்குள் நாட்டில் மேலும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படும்.
 • ராஷ்ட்ரிய வியாபார ஆயோக்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும், இதன் மூலம் 60 வயதை கடந்த சிறு வியாபாரிகளுக்கு பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் 
 • நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 2024ம் ஆண்டிற்குள் அனைத்து  வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
 • கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்.
 • முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
 • நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
 • முத்ரா கடன் திட்டம் மூலம் 17 கோடி தொழில்முனைவோர் பலனடைந்துள்ளனர்; இந்த எண்ணிக்கை 30 கோடியாக உயர்த்தப்படும்.