தளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ்! பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ!

0
273

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதுபோக கதிர், விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், இந்துஜா, டேனியல் பாலாஜி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து உனக்காக எனும் காதல் மெலடி பாடல் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.