பிகில் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

0
241

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைந்துள்ளார் அட்லீ. ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக கால்பந்து பயிற்சியாளராகவும் நடிக்கிறார். இந்த படமானது வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் இணையத்தில் கசிந்தன. இதனை முன்னிட்டு படக்குழு இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாக அறிவித்துள்ளனற்ற. அதிலும் இதன் சிங்கில் ட்ராக் விரைவில் வெளியிடவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.