அடுத்தவார கேப்டனாக ஆரி மாறினால்…?கதறி அழுகும் சம்யுக்தா

0
34

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களாக ஆரி, சோம் மற்றும் நிஷா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்.இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் சக போட்டியாளர்களிடம் சம்யுக்தா புலம்பி வருகிறார். நீதிமன்ற அறையில் ஆரி கத்தியதை யாருமே தவறாக பார்க்கவில்லையா? பிறகு எப்படி அவரை இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளராக தேர்வு செய்கிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சம்யுக்தா இந்த வாரம் அதிர்ஷ்டத்தில் கேப்டனாகி ஆரி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அடுத்த வாரம் ஆரி கேப்டன் ஆகிவிட்டால் சம்யுக்தாவுக்கு அது அப்படியே பூமராங் மாதிரி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சம்யுக்தா கதி கலங்கி இருப்பதாக ஆஜித்திடம் அவர் புலம்புவதில் இருந்து தெரியவருகிறது .அடுத்த வாரம் கேப்டனாக ஆரி தேர்வு செய்யப்பட்டால் பல தரமான சம்பவங்கள் சம்யுக்தாவுக்கு காத்து இருப்பதாகவே கருதப்படுகிறது.