‘போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்கிறாங்க’…பாலாஜியிடம் புலம்பும் ஷிவானி

0
10

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கை சரியாக விளையாடாத பாலாஜி மற்றும் சுசி ஆகிய இருவரும் இன்று சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறைக்குள் பாலாஜி இருப்பது அவரை விட ஷிவானிக்குத்தான் பெரும் சோகமாக இருந்தது. தனியாக பலூன் மீது எதையோ எழுதி கொண்டிருக்கின்றார். இதுகுறித்த காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது.

ஏற்கனவே பாலாஜி-ஷிவானி காதலை கலாய்த்த ரம்யா மற்றும் சம்யுக்தா, இப்போது ஷிவானி முன்பே நேரடியாகவே கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஒருநாள் முழுவதும் நீ எப்படித்தான் தனியா இருக்க போறியோ என சம்யுக்தாவும், இனிமேல் நீங்கள் எங்க கூட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் என்று ரம்யாவும் மாறி மாறி கலாய்க்க, ‘போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்கிறாங்க’ என ஷிவானி புலம்பும் காட்சி உள்ளது.