உங்களுக்கு எப்படி கூப்பிட்டா சந்தோசம்…கமல் கேள்விக்கு சுரேஷ் அளித்த பதில்!

0
12

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாளான இன்று சுவராஸ்யமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இன்றைய மூன்று புரமோக்களும் கேள்வி எழுப்பியுள்ளன. இன்றைய இரண்டு புரமோவும் எவிக்சனை வைத்து ஓட்டிவிட்ட மூன்றாவது புரமோவும் சுமாரான காட்சிகளை கொண்டதாக உள்ளது.கேப்ரில்லாவுக்கும் பாலாஜி மற்றும் ஆஜித்துக்கும் இடையில் நடந்த பிரச்சனை குறித்து கமல் விசாரிக்கிறார். அதற்கு கேப்ரில்லா விளக்கமளிக்கின்ரார். அதன்பிறகு சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிக வலியை கொடுத்துவிட்டதாக தனது வருத்தத்தை கேப்ரில்லா பகிர்ந்து கொள்கிறார்.

அப்போது சுரேஷை கேப்ரில்லா ’தாத்தா’ என அழைக்க அதற்கு கமல் சுரேஷிடம், ‘உங்களை தாத்தா என்று நான் சொன்னால் பிடிக்குமா அல்லது தகப்பனார் என்று சொன்னால் பிடிக்குமா என்று கேட்க அதற்கு தாத்தா தான் பிடிக்கும் என்று சுரேஷ் சக்கரவர்த்தி பதிலளிக்கிறார் இந்த காட்சிகளோடு இன்றைய மூன்றாம் புரோமோ முடிவெடுக்கிறது

இன்றைய மூன்று புரமோக்களை விட அந்த புரமோக்களுக்கு நெட்டிசன்கள் பதில்கள் சுவாரஸ்யமாக உள்ளது. மீண்டும் ஒருமுறை தாத்தா சுரேஷ் பார்வையாளர்களின் மத்தியில் ஹீரோ ஆகிவிட்டார் என்பதையே அது காட்டுகிறது.