குறும்படம் கண்டிப்பா இருக்கு…ஆரியிடம் வசமாக சிக்கிய பாலாஜி!

0
45

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களை உசுப்பேத்தி தனது தந்திரத்தை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக பாலாஜி விளையாடி வருகிறார் என்பது கண்கூட தெரிகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு தானே காரணம் என்று முன்வந்து விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் கடந்த சில நாட்களாக பாலாஜி ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பாலாஜி மற்றும் ஆரி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் மோதல் நடந்த போது இரண்டு இடங்களில் பாலாஜி ஆரியிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

நேற்றைய நீதிமன்ற டாஸ்க்கின்போது, போட்டியாளர்கள் அனைவருக்கும் ஆரி வார்னிங் கொடுத்ததாக பாலாஜி குற்றம் சாட்டினார். ஆனால் வெளியே வந்தபின்னர் வார்னிங் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்று கூறினார். ஆனால் அந்த இடத்திலேயே பாலாஜியை எப்போது வாரிவிடலாம் என காத்திருந்த சனம், திடீரென பாலாஜி வார்னிங் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று கூறி அவருக்கு கடுப்பேற்றினார்.

ஆரம்பத்தில் சில நாட்கள் பாலாஜியின் போக்கு ஹீரோவாக இருந்த நிலையில் தற்போது அவர் பார்வையாளர்களுக்கு வில்லனாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய நீதிமன்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலாஜி கூறிய ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டது. இதனால் அவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.