ஜெலியிலுக்கு சென்ற பாலாஜி-சுசி..!சோகத்தில் மூழ்கிய ஷிவானி…

0
18

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலா அணியினர் சரியாக விளையாடவில்லை . அவர்களது நேரம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் வித்தியாசம் இருந்தது.

இதனை அடுத்து சற்று முன்னர் வெளியான முதல் புரமோவில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் இருந்து இருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து வழக்கம்போல் அர்ச்சனா தலைமையில் போட்டியாளர்கள் ஆலோசனை செய்து ஒருமனதாக பாலாஜி மற்றும் சுசியை தேர்வு செய்கின்றனர், ரம்யா ஓரளவுக்கு விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்ததால் அவரை தப்பிக்க வைத்தனர்.

இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி பெயரை சக போட்டியாளர்கள் பிக்பாஸ் இடம் தெரிவித்ததை அடுத்து இருவரையும் ஜெயிலுக்கு அனுப்ப பிக்பாஸ் உத்தரவிட்டார். இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் பாலாஜி உடன் எப்போதும் ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் ஷிவானி வருத்தப்பட, ’நீ ஏன் வருத்தப்படுகிறாய் என்று பாலாஜி அவரை தேற்றுகிறார். இதனால் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வரும் வரை பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் இருக்காது என்றாலும் பாலாஜி-சுசியின் ரொமான்ஸ் காட்சிகள் சிறையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக பார்வையாளர்கள் கமென்ட் பகுதியில் தெரிவித்துள்ளனர்.