அர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி …வெளியான கண் கலங்க வைக்கும் வீடியோ

0
58

கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் நேற்று அந்த பிரச்சனை பெரிதாக வெடித்தது. இன்று காலை முதல் வெளியான புரமோவிலும், பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர் ஆக்ரோஷமாக மோதி கொண்ட காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இந்த சண்டை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே கணித்தனர்.இந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு தாய், மகன் அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குள் என்னதான் நடந்தது என்றே புரியவில்லை.

இன்றைய அடுத்த புரமோவில் அர்ச்சனா, ‘இன்று மட்டுமல்ல, மொத்தமாகவே உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்குள் இருக்கும் ஒரு அம்மா, திரும்ப திரும்ப நான் மிஸ் செய்த ஒரு குழந்தையை உனக்குள் தேடிக்கொண்டே இருந்தேன். நான் அந்த குழந்தை இல்லை என்று நீ எனக்கு சொல்லிவிட்டாய். அதனால் தான் நான் தள்ளி நிற்கிறேன். உனக்குள்ளே அது இல்லை என்று எனக்கு தெரிகிறது. என்னை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் நான் எங்கேடா போவேன் என்று அழுதுகொண்டே அர்ச்சனா கூற, அந்த சமயத்தில் பிக்பாஸ் குழுவினர் மிகச்சரியாக பின்னணியில் ’ஆராரிராரோ’ என்ற ராம் படத்தில் வரும் தாய்ப்பாச பாடலை போட்டு பார்வையாளர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளனர்.

இதனையடுத்து திடீரென எழுந்த பாலாஜி, அர்ச்சனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு பாசத்தை பொழிவதோடு இன்றைய மூன்றாம் புரமோ முடிவுக்கு வருகிறது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன் வரை இருவரும் மோதிக் கொண்ட நிலையில் தற்போது தாய் மகன் பாசத்தை பொழிவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.