பிக்பாஸ் வீடு நீரில் மூழ்கியதா..?நிகழ்ச்சி ஓளிபரப்புவது நிறுத்தப்படுமா..?வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
84

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 14 பேர் வீட்டில் உள்ளனர்.

இவர்களுக்கு நாள்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பது வழக்கம். கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் காலத்தை சரியாக கணிக்க வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இந்தவாரம் கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயலால் செவ்வாய்க்கிழமையிலிருந்தே சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஏரிகள் நிரம்பி சில பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து சென்னை மீண்டும் வெள்ளக் காடானது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் அடையாற்று கரையோரம் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், அதனால் போட்டியாளர்கள் அங்கிருந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. உள்ளே புகுந்த நீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.மேலும் இதுகுறித்து விஜய் டிவி தரப்பினர் தெரிவித்திருப்பதாவது, அப்படி வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. எப்போதும் போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு வழக்கம் போல் டாஸ்க் கொடுக்கப்படுவது தொடர்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தாமதமாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.