பிக்பாஸ் வீட்டுக்குள் பிகில் பட நடிகை வைல்ட் கார்ட் என்ட்ரி..?

0
47

பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 31 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை, ரேகா, வேல்முருகன் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் ஆரி, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், சனம் ஷெட்டி, பாலாஜி என மொத்தம் ஆறு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெறும் ஒருவர் இந்த வார இறுதியில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

கடந்த வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்பட்டாலும் பாடகி சுசித்ரா வீட்டுக்குள் 2-வது வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி ஆனார். இந்நிலையில் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்தவரும் நடிகர் ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில் 3-வது வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கோப்பையுடன் தனிமையில் அமர்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருப்பதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து நடிகை இந்திரஜா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

https://www.instagram.com/p/CHIS8PsBaFE/