’பிக் பாஸ்’ சீஸன் 3 ல் பங்கு பெரும் பிரபலங்கள்–யாருனு தெரியுமா,லீக்கான பட்டியல்…

0
270

விஜய் டி.வி.யின் பரபரப்பான ‘பிக் பாஸ்’ சீஸன் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் குறித்து யுகங்கள் இப்போதே வர தொடங்கி விட்டன.ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஆரம்பக்கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.துவக்கத்தில் கமலுக்குப் பதில் இந்நிகழ்ச்சியை நடிகை நயன்தாரா நடத்தப்போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு கமலே நடத்துகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் பங்கு பெற போகும் பிரபலங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்கள் யார் என்றால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துவரும் மகேந்திரன், ’காலா’, ’விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சாக்‌ஷி அகர்வால், ’ராஜா ரங்குஸ்கி’, ’வில் அம்பு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த சாந்தினி தமிழரசன், ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவியாவின் இடத்தில் கன்னகுழியழகி லைலாவை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த சீஸனில் பெரும்பஞ்சாயத்தைக் கிளப்பி நிகழ்ச்சியை பரபரப்பாக்கி வைத்த தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவும் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்.