கொரோனா லாக்டவுனில் பிக்பாஸ் மதுமிதா செய்த கலக்கலான விஷயம்

0
37

படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி மதுமிதாவாக நடித்து அசத்திய மதுமிதா தொடர்ச்சியாக பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, தற்கொலை முயற்சி செய்ததாகக் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை மதுமிதா தனது ட்விட்டர் பதிவில், “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.