பிக் பாஸிற்கு பின் சாண்டியின் நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லாஸ்.! வைரலாகும் வீடியோ.!

0
97

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது இவரது நடனம் தான் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் கேமரா முன்னால் வந்து நடனமாடுவதை எப்போதும் மறந்ததே கிடையாது. இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது என்றும் கூறலாம். அதிலும் பிக்பாஸ் வீட்டில் அவரது நடன பார்ட்னர் சாண்டிதான்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியா சாண்டியின் நடன பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே சாண்டி குழுவுடன் சினிமா பாடல்களுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் லாஸ்லியா இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.