ரியோவை டார்கெட் செய்த சகபோட்டியாளர்கள்…வெளியான நியூ ப்ரோமோ

0
36

பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது கொரோனா காரணமாக நாமெல்லாம் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது போல பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்களும் முகமூடி அணிந்து கொண்டு தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டாமல் இருக்கிறார்கள் என தொடர்ந்து விமர்சனம் இருந்து வருகிறது.கமல்ஹாசன் அது பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இந்நிலையில் இன்று 14ம் நாள் முதல் ப்ரொமோ வீடியோ வெளிவந்திருக்கும் நிலையில், அதில் எந்த போட்டியாளர் முகமூடி போட்டுக் கொண்டிருப்பது போல தெரிகிறது என சொல்லும்படி கமல்ஹாசன் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார்.

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் யார் மாஸ்க் போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை சொல்லி அவர்களுக்கு ஒரு மாஸ்க்கை கொடுக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் ரியோ மற்றும் ஆரி இருவருக்கும் தான் மாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் தான் உண்மை முகத்தை வெளியில் காட்டாமல் இருப்பது போல தெரிகிறது என்று மற்ற போட்டியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் பேர் ரியோவுக்கு முகமூடி கொடுத்திருப்பது பற்றி பேசிய கமல்ஹாசன், “உங்களுக்கு கொடுத்து இருப்பது நியாயம் என நினைக்கிறீர்களா?” என கேட்கிறார், அதற்கு ரியோ “நியாயமில்லை என நினைக்கிறேன்” என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதால், அது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த முகமூடி டாஸ்க்கும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.