இது என்ன பிக்பாஸ்ல இப்படி ஒரு ட்விஸ்ட்…குழப்பத்தில் நெட்டிசன்கள்

0
65

பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் பேசும் விஷயங்கள் ஏதாவது பிரச்னையை தினம்தோறும் உண்டாக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் பிக் பாஸ் வந்த முதல் நாலிலேயே அனிதாவிடம் சண்டையை துவக்கினார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக தான் இருந்து வருகிறார்கள்.அந்த பிரச்சனைக்கு சென்ற வாரம் கமல்ஹாசன் தான் வந்து சமரசம் செய்து வைத்தார். அதற்கு பிறகு அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் பேசிக்கொள்ளாமல் தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் வழங்கப்பட்டு உள்ள டாஸ்கில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்த கலக்கலாக நடனம் ஆடி இருக்கிறார்கள். இது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. சார்லி சாப்ளின் 2 படத்தில் வரும் சின்ன மச்சான் பாடலுக்கு தான் அவர்கள இருவரும் ஆடி இருக்கிறார்கள்.அவர்கள் நடனத்தை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ இது.