பிக்பாஸ் ஷோவுக்கு பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கும் புதிய படம்…!

0
19

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் பெற்றார் என்பதும், தற்போது அந்த பிரபலத்தின் அடிப்படையில் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். அதில் அர்ஜுன் சிதம்பரம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றில் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுன் சிதம்பரம் ஏற்கனவே அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் துஷாரா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவேளைக்குப்பின் சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் பெரிய திரையில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.