பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….

0
232

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியும் ஐஸ்வர்யா தத்தாவும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். இப்படத்தினை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கவுள்ளார். சமீபத்தில் இவர் 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பெயர் பொல்லாத உலகில் பயங்கர கேம்.

பப்ஜி போன்ற ஒரு பயங்கர விளையாட்டில் பங்குபெறும் 5 பேர் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதைப் பற்றித்தான் இந்தப் படத்தின் கதை என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.