பிக்பாஸ் பிரபலத்தின் முதல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .!

0
18

பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் முதலாவது சீஸனின் வெற்றியாளரான ஆரவ் தற்பொழுது தமிழ் சினிமாவின் கதாநாயகனாக காலம் எடுத்துள்ளார் . இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்கிறார்.

வட சென்னை பெண் ரவுடி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும், காவ்யா தாப்பர், நிகிஷா படேல், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளனர்.