சுரேஷ் சக்ரவர்த்தி -வேல்முருகன் இடையே வெடித்த பூகம்பம்…அனல் பறக்கும் சண்டையால் அலறும் பிக்பாஸ் வீடு..?

0
58

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அதற்கு காரணம் போட்டியாளர்கள் இடையில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் தான். கடந்த மூன்று வருடங்களில் இது நடந்து இருந்தாலும், இந்த வருடம் துவக்கத்திலிருந்தே போட்டியாளர்கள் நடுவில் தினம் தோறும் புதிது புதிதாக சண்டை நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த சீசனில் வனிதா பல பிரச்சனைகள் உண்டாக்கியது போல இந்த சீசனில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் பல பிரச்சனைகள் காரணமாக இருப்பார் என நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலேயே ரசிகர்கள் கணித்து விட்டார்கள். அதற்கு தகுந்தாற்போல சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டுக்குள் மற்றவர்களிடம் பேசும் விதம் தினமும் ஏதாவது ஒரு புதிய பிரச்சனை உண்டாக்கி விடுகிறது. நேற்று அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது ரியோவை எடுத்துக்காட்டாக கூற முனைந்த போது அவர் கடும் கோபத்தில் கொந்தளித்தார். இதனால் பலரும் ஷாக் ஆனார்கள். ரியோவா இது என அனைவரும் கேட்கத் துவங்கி விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய ப்ரோமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாடகர் வேல்முருகன் இடையே கோபமான வாக்குவாதம் நடந்திருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த போது சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்திருந்த வேட்டி தான் வேல்முருகன் அணிந்திருந்தார். அதை அவரே கமலிடம் கூறி இருந்தார். அது பற்றி இன்று அவர்கள் பேசிக்கொண்டது தான் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது.

“வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமாக பேசுகிறீர்கள். நான் உங்களை கேட்டேனா” என கத்தினார் வேல்முருகன்.

அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி “நீங்கள் காதில் வாங்கவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல” என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதனால் கோபமான வேல்முருகன் “சொல்லிவிட்டுப் போங்கள்” என அவருடன் சண்டை போடுகிறார். “அந்த வேஷ்டி வாங்கியதற்காக என்னை இவ்வளவு அசிங்கப் படுத்துகிறீர்கள்” என அவர் கேட்டிருக்கிறார்.இந்த ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சுரேஷ் சகரவர்த்தி “பரட்ட பத்த வச்சுட்டியே பரட்டை’ என நக்கலாக பேசியிருக்கிறார் .