அச்சு அசலாக விக்ரம் போலவே இருக்கும் பேபி சாராவின் தந்தை.! வைரலாகும் புகைப்படம்!

0
134

தமிழில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “தெய்வத்திருமகள் ” படத்தில் விக்ரமின் மகளாக நடித்த குழந்தையை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

“தெய்வத்திருமகள் ” படத்திற்கு பிறகு தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு” போன்ற படங்களில் நடித்திருந்தார் பேபி சாரா. தற்போது ஹலிதா சமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பேபி சாரா.

இயக்குனர் ஹலிதா சமீம் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “பூவரசம் பீப்பி ” என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி, நடிகை சுனைனா லீலா சாம்சன் போன்றவர்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் 4 கதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.


பேபி சாராவை தமிழ் ரசிகர்கள் இறுதியாக ‘சைவம்’ படத்தில் பார்த்தனர். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. சமீபத்தில் பேபி சாரா பொது நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் பேபி சாராவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் பேபி சாரா தனது தனத்தையுடன் இருகுகிறார். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அது விக்ரம் என்று நினைத்து விட்டனர். அதற்கு முக்கிய காரணமே சாராவின் தந்தை கடாரம் கொண்டான் படத்தில் வரும் விக்ரம் போலவே இருக்கிறார் என்பதால் தான்.