நான் கண்டிப்பாக ஒரு நாள் வருவேன்—அயோக்கியா படம் ரிலீஸ் ஆகாததால் விஷால் கோபம்..

0
438

விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம், நிதி பாக்கி விவகாரத்தால் தள்ளிப்போகியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர் முருகதாசின் உதவியாளரான வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமான, அயோக்யா படத்தில் விஷால் – ராக்‌ஷி கண்ணா நடித்திருந்தனர்.இந்த படம் இன்று திரைக்கு வர இருந்த நிலையில், திடீரென படம் ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் அதை கொடுத்தால்தான் அயோக்யோ திரைப்படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என்று தென்னிந்திய திரைப்பட சபை சார்பில் கூறியுள்ளதால் படம் வெளியாகவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் கோபத்துடன் ட்வீட் போட்டுள்ளார்.