சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கும் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இதோ…கட்சியின் பெயர் என்ன தெரியுமா..?

0
43

நடிகர் சூப்பர் ஸ்டார் எப்பொழுது கட்சி ஆரம்பிப்பார் என்று கேள்வி நீடித்து கொண்டு இருந்த நிலையில்,அதற்கு சமீபத்தில் அவரிடம் ஒரு நல்ல பதில் வந்துள்ளது.ஆமாம்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியான தகவலின் படி,ரஜினியின் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்த் அவர்கள் ’மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அந்த கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் அதற்கு தற்போது ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Baasha Rajinikanth | Super scene | Tamil | How to Live a Life | Ranga -  YouTube

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதே ஆட்டோ சின்னம் ரஜினி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த சின்னம் மாஸ் சின்னம் என தெரிவித்து வருகின்றனர்.